Bagneux : காவல்துறையினரின் விசாரணைகளில் ஒருவர் பலி!!
11 மார்கழி 2024 புதன் 14:06 | பார்வைகள் : 1133
Bagneux நகர காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Bagneux (Hauts-de-Seine) நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மூன்று நாட்களுக்கு முன்னர், சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதுடைய ஒருவரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் சற்று நிமிடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தக்கசிவு காரணமாக அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு காவல்துறையினான IGPN, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.