Paristamil Navigation Paristamil advert login

காளான் பிரியாணி..

காளான் பிரியாணி..

11 மார்கழி 2024 புதன் 14:52 | பார்வைகள் : 119


பொதுவாகவே அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணக்கூடிய உணவு வகைகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விடுகிறது  பிரியாணி. என்னதான் மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் வறுவல் என்றெல்லாம் வகை வகையான அசைவ உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என்றே தனி இடம் உள்ளது.

அதிலும் பிரியாணி வகைகளில் பல ரகங்கள் தற்போது செய்யப்பட்டு ருசிக்கப்பட்டும் வருகிறது. அசைவ பிரியாணிகளுக்கு ஈடாகவே வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, பிரெட் பிரியாணி போன்றவையும் சிறப்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சிக்கன் பிரியாணிக்கு டப் கொடுக்கும் காளான் பிரியாணி ஈசியாக வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:  

பாஸ்மதி அரிசி, 
காளான், 
தக்காளி, 
வெங்காயம், 
சில்லி சாஸ் ,
சோயா சாஸ், 
மிளகு ,
சீரகத்தூள், 
இஞ்சி, 
உடைத்த முந்திரி ,
எண்ணெய், 
நெய், உப்பு ஆகியவை ஆகும்.

செய்முறை: முதலில் அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிகட்ட வேண்டும். பின்னர் காளான், இஞ்சி ,வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தக்காளியின் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, சூடானதும் காளான் சேர்த்து அதில் இஞ்சி, வெங்காயம் முந்திரி சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு,சீரகத்தூள் சேர்த்து கிளற வேண்டும். பின்பு அதில் தக்காளி சாறு ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்ததாக தேவையான நீர் சேர்த்து, கொதித்த உடன் அரிசியை போட்டு, கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் நிறுத்தவும் . பின்பு குக்கரை திறந்து கிளறி சூடாக பரிமாறினால் சூப்பரான , ஸ்பைசியான காளான் பிரியாணி ரெடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்