Paristamil Navigation Paristamil advert login

'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!

'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!

7 கார்த்திகை 2018 புதன் 10:30 | பார்வைகள் : 17597


முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த யுத்தத்தில் பயன்படுத்திய முக்கியமான ஒரு ஆயுதம் தான் French 75!!
 
முதலாம் உலக யுத்தம் தொடங்கும் முன்னர் வரை மிக மெதுவாக செயற்படும் 'ஆட்லொறி' தான் பிரெஞ்சு இராணுவத்திடம் இருந்தது. பின்னர் அவசர அவசரமாக தயாரித்த ஒரு 'பீரங்கி' தான் இந்த 75!!
 
Matériel de 75mm Mle 1897 எனும் பெயர் கொண்ட இந்த பீரங்கி 'அதிவேகமாக செயலாற்றும் திறன் கொண்டது. இந்த பிரத்யேக வடிவமைப்பை 1898 ஆம் ஆண்டு பிரான்ஸ் தயாரித்திருந்தது. 
 
1,544 கிலோ எடை கொண்ட இந்த பீரங்கியில் பொருத்தப்பட்ட 75mm அளவு கொண்ட குண்டு ஒன்றை மின்னல் வேகத்தில் பதினோராயிரம் மீற்றர்கள் வரை அனுப்பும் திறன் கொண்டது இந்த French 75!!
 
 
பீரங்கி குழாயின் நீளம் 2.69 மீற்றர்கள். 
 
முதலாம் உலகப்போரின் பெரியளவில் பயன்படுத்தினாலும், முதன் முதலாக பிரெஞ்சு காலனித்துவ யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. 
 
பின்னர் இந்த ஆயுதத்தை அமெரிக்கா, போலந்து, பெல்ஜியம், சேர்பியா, ருமேனியா,  பின்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளும் இந்த ஆயுதத்தை பயன்படுத்தியது. 
 
Matériel de 75mm Mle 1897 எனும் பெயரை French 75 என சுருக்கமாக வைத்துள்ளனர். இன்று அருங்காட்சியகத்தில் இதனை காணலாம்...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்