பயங்கரவாத தாக்குதலின் நினைவாக அருங்காட்சியகம்... திட்டம் கைவிடப்பட்டது!
12 மார்கழி 2024 வியாழன் 08:39 | பார்வைகள் : 319
பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக பரிசில் அருங்காட்சியகம் (Musée-mémorial du terrorisme) ஒன்று அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அது கைவிடப்பட்டுள்ளது.
பிரான்சில் இடம்பெற்ற அனைத்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விபரங்களையும், அதன் ஆவணங்களையும் சேமித்து வைக்கும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிகப்பட்ட நிலையில், ஐந்து வருடங்களின் பின்னர் அது கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் தெரிவிக்கின்றன.
(புகைப்படத்தில் : பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான பத்தகலோன் அரங்கின் முகப்பு)