வீதி விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை வீழ்ச்சி!!
12 மார்கழி 2024 வியாழன் 10:49 | பார்வைகள் : 306
கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சில் வீதி விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை 6% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி பதிவானதாக இன்று வியாழக்கிழமை Sécurité routière நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருட நவம்பரின் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 270 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 251 பேர் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் பலியாகியிருந்தனர்.
இவ்வருட ஆரம்பம் முதல் நவம்பர் மாதம் வரை வீதி விபத்துக்களில் 2,926 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி-நவம்பர் மாதங்கள் வரையான காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 2% சதவீதம் அதிகமாகும்.
விபத்து ஏற்படுவதற்காக காரணங்களில் மது பாவனையே முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக அதிவேகம், தூக்கமின்மை போன்ற காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேவேளை, கடல்கடந்த நிர்வாக பிராந்தியங்களில் (régions d'Outre-mer) இந்த நவம்பர் மாத எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.