Paristamil Navigation Paristamil advert login

யாழில் சிறைக் கைதி ஒருவர் மயங்கி விழுந்து மரணம்

யாழில் சிறைக் கைதி ஒருவர் மயங்கி விழுந்து மரணம்

12 மார்கழி 2024 வியாழன் 11:57 | பார்வைகள் : 176


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே இவ்வாறு  உயிரிழந்தவராவார்.

குறித்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு பட்டவர் என பொலிஸார்  மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்