Roland Garros விமான நிலையம்!!

5 கார்த்திகை 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 21481
Réunion தீவு குறித்து பிரெஞ்சு புதினம் வாசித்திருப்பீர்கள்... பிரான்சுக்கு சொந்தமான இந்த தீவில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளது. அட ஆச்சரியம் தான்... தொடர்ந்து வாசியுங்கள்....!!
Réunion தீவில் உள்ள முதலாவது விமான நிலையம் செந்தனியில் (அட...) உள்ளது. Roland Garros எனும் பிரான்சின் புகழ்பெற்ற விமானி இந்த தீவில் பிறந்ததால் அவரை கெளரவிக்கும் முகமாக விமான நிலையத்துக்கு இந்த பெயரை சூட்டியுள்ளனர். Aéroport de la Réunion Roland Garros என்பது விமானநிலையத்தின் முழு பெயர்!!

இரண்டாவது விமான நிலையம் Aéroport de Saint-Pierre - Pierrefonds எனும் சிறிய விமான நிலையமாகும். Saint-Pierre எனும் நகரில் உள்ளது இந்த விமான நிலையம். இந்த விமான நிலையம் கடந்த 2008 ஆம் ஆண்டில் 135,000 பயணிகளைச் சந்தித்திருந்தது. (இந்த எண்ணிக்கை சாள்-து-கோல் விமான நிலையத்தில் ஒரு நாளில் பயணிக்கும் பயணிகளை விட குறைவாகும்!)
உங்களுக்குத் தெரியுமா...., ஒரே தீவில் உள்ள இவ்விரண்டு விமான நிலையங்களுக்கும். இடையே இருக்கும் தூரம் தரைவழியில் 82 கிலோமீற்றர்கள் தான்...!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025