2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள்

12 மார்கழி 2024 வியாழன் 15:26 | பார்வைகள் : 3411
சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாபா வங்காவின் கணிப்புகள் அல்லது தீர்க்கதரிசனங்கள் மீண்டும் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளன.
சிரியா வீழ்ந்ததும் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என பாபா கணித்துள்ளார். ஆகவே, விரைவில் அது நடக்கக்கூடும் என அவரைப் பின்பற்றுவோர் கருதுகிறார்கள்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் அழிவு
சிரியா வீழ்ந்ததும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் துவங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் துவங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும்’ என்று கூறியுள்ளார் பாபா.
ஆக, அவரது கூற்றுப்படி, மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்றும், ஐரோப்பாவுக்கு அழிவு ஏற்படும் என்றும் பாபாவை பின்பற்றுவோர் கருதுகிறார்கள்.
ஏலியன்கள் தொடர்பு
’மனித இனம் ஏலியன்களை தொடர்புகொள்ளும், அதனால் உலகம் முழுவதும் நெருக்கடி அல்லது பேரழிவு ஏற்படலாம்’ என்று கூறியுள்ளார் பாபா.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும், அமெரிக்காவிலுள்ள ஏலியன்கள் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் வெளியிட இருப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெலிபதி சாத்தியம்
2025இல், டெலிபதி என்னும் மனங்களை தொடர்புகொள்ளும் விடயம் சாத்தியமாகும் என்றும், அது மனித தொடர்புகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பாபா கணித்துள்ளார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆண்டு
2025ஆம் ஆண்டில் அறிவியலிலும், மருத்துவத்திலும் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நடக்கும் என கணித்துள்ளார் பாபா.
இன்னொருபக்கம், இந்த கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்துவதால், அவற்றால் ஆபத்துகளும் நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார் பாபா.
இது குறித்து பாபா கணித்த அவரது சொந்த வார்த்தைகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. ஆகவே, இந்த ஒரு விடயம் எந்த அளவுக்கு நம்பத்தகுந்தது என்பது தெரியவில்லை.