RER C தொடருந்து மோதி பெண் ஒருவர் பலி!!
12 மார்கழி 2024 வியாழன் 16:35 | பார்வைகள் : 528
RER C தொடருந்து மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று டிசம்பர் 12, வியாழக்கிழமை இச்சம்பவம் Igny (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை பெண் ஒருவர் அங்குள்ள பாதசாரி கடவையினை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த தொடருந்து அவரை மோதித்தள்ளியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் கொல்லப்பட்டார். மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டு அப்பெண் மீட்கப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
வீதிகளின் இரு பகுதிகளிலும் சிலமணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது. தொடருந்து போக்குவரத்தும் தடைப்பட்டது.