Nouvelle-Calédonie உண்மையில் யாருக்குச் சொந்தம்!!??
4 கார்த்திகை 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18330
இன்னும் சில நிமிடங்களில் மேற்கண்ட கேள்விக்கு பதில் தெரியவரும் இந்த நிலையில், சுடச்சுட ஒரு பிரெஞ்சுப்புதினம் உங்களுக்காக...!!
பசுஃபிக் பெருங்கடலில், அவுஸ்திரேலியாவில் இருந்து கிழக்கில் 1,210 கிலோமீட்டர்கள் தொலைவில் தட்டத்தனியே உள்ள தீவுதான் இந்த புதிய கலதோனியா!!
இத்தீவினர் தனி நாடு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் இவர்களுக்கு என்ன பிரச்சனை??! உத்தியோகபூர்வ அரச மொழியாக பிரெஞ்சு இருந்தாலும்.... இங்கு வசிப்பவர்களில் 1% கூட பிரெஞ்சு பேசுவதில்லை.
தனியே கடலில் அநாதையாக இருக்கு இந்த தீவை பிரெஞ்சு தேசம் தங்களால் முடிந்தவரை பாதுகாக்கின்றதே தவிர, வேறு எந்த பூர்வீகமும், தொடர்பும் இல்லை.
இத்தீவில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் Nengone எனும் ஒரு மொழியினை பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து, Paicî, Ajië, Drehu, Javanese இது மாதிரியான கேள்விப்படாத மொழிகள் எல்லாம் பேசுகின்றனர். இது தவிர மொத்தம் 35 பூர்வீக மொழிகள் பேசுகின்றனர். இந்த 35 க்குள் எங்கோ ஒன்றுதான் பிரெஞ்சு!!
Nengone எனும் மொழி இருக்கிறதே, அதைப் பேசுபவர்களே 9,000 பேருக்கும் குறைவான மக்களே...!! அவுஸ்திரேலிய ஆங்கிலம், அங்கிருக்கும் பூர்வீக மொழி, மலாய், பொலினேசியா போன்ற மொழிகளை எல்லாம் பினைந்து எடுத்து செய்த மொழிதான் இந்த Nengone!!
ஒரு குட்டித்தீவிலேயே 35 மொழிகளுக்கு மேல் பேசினால், அங்கு எப்படித்தான் சமாளிப்பது... இதில் ஆங்கிலம் மருந்துக்கும் இல்லை!!
இங்கு கிட்டத்தட்ட 278,500 பேர் வசித்தாலும், இவர்களில் வாக்காளர்கள் 174,154 பேர் தான்.
சரி, இந்த தீவு யாருக்குச் சொந்தம்...??
'நாங்கள் விட்டுத்தரமாட்டோம்!' என சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த முகாந்திரமும் பிரெஞ்சு அரசுக்கு இல்லை.. இதனாலேயே இன்றைய வாக்கெடுப்பு தீவினருக்கு சாதகமாக அமைந்தால், 'நீயே வச்சுக்க ராஜா' என தனி நாடாக பிரிந்து சென்றுவிடும். இல்லை என்றால் பிரெஞ்சு அரசின் கீழ் தான் இருக்கும்.
இந்த தீவில் பயன்படுத்தப்படும் பணத்தின் பெயர் CFP franc... ஆயிரம் CFP franc ஐ யூரோவுக்கு மாற்றினால் € 8.38 கள் வரும்!!
அக்கம் பக்கத்தில் ஒரு தீவு கூட இல்லாமல் தனியே இருக்கும் இந்த கலதோனியாவுக்கு கள்ளத்தோணி பிடித்தாவது ஒரு நாள் சென்றுவரவேண்டும்!!