Réunion தீவு! - சில தகவல்கள்!!
3 கார்த்திகை 2018 சனி 10:30 | பார்வைகள் : 18277
தோசைக்கல்லில் ஊத்தப்பட்ட வட்டத் தோசை போல் இந்திய பெருங்கடலுக்கு நடுவே மிதக்கும் தீவு தான் இந்த Réunion!!
தீவுக்கு கிழக்கே 175 கிலோமீட்டரில் மடகாஸ்கரும், தென்மேற்கு பிராந்தியத்தில் மொரிசியசுவும் ஆதரவாக இந்த தீவுக்கு துணை நிற்கின்றன.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கில் படி இங்கு 865,826 மக்கள் வசிக்கின்றனர்.
தனியே யார் கண்ணிலும் படாமல் மிதந்துகொண்டிருந்த இந்த தீவில், 17 ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் குடியேற தொடங்கினார்கள்....!!
பிரெஞ்சு மக்களும், மடகாஸ்கரைச் சேர்ந்தவர்களும் குடியேறத்தொடங்கி, அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
20 டிசம்பர் 1848 ஆம் ஆண்டு இங்கு அடிமைத்தனம் அடியோடு ஒழிக்கப்பட்டது. அதுவே இத்தீவினருக்கு சுதந்திர தினம் போன்றது.... வருடா வருடம் இந்தற்கான கொண்டாட்ட நிகழ்வுகளும் உண்டு...!!
இந்த தீவு வழக்கம் போல் இழுபறியில் இருக்க, 1946 ஆம் ஆண்டு இந்த தீவை பிரான்ஸ் தனதாக்கிக்கொண்டது.
அன்றில் இருந்து பிரெஞ்சு உத்தியோகபூர்வ அரச மொழி ஆனது. மக்கள் பிரெஞ்சுடன் சேர்த்து பிரெஞ்சு மாதிரி உள்ள Creole எனும் மொழியையும் பேசுகின்றனர்.
இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்...
இத்தீவின் சில பகுதிகளில் நீந்த தடை விதித்துள்ளார்கள்... தெரியுமா? காரணம் இங்குள்ள சுறாக்கள்... பல ஆபத்தான சுறாக்கள் தீவை சுற்றி வருகின்றன.
2010 இல் இருந்து 2017 ஆம் ஆண்டுக்குள் 23 சுறா தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தீவில் மேலும் பல விசித்திர் விலங்குகள் உள்ளன... தொடர்ந்து பார்க்கலாம்...!!