Paristamil Navigation Paristamil advert login

5 கிலோ கொக்கைன், வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பரிசில் ஒருவர் கைது!

5 கிலோ கொக்கைன், வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பரிசில் ஒருவர் கைது!

13 மார்கழி 2024 வெள்ளி 14:06 | பார்வைகள் : 730


போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் தலைநகர் பரிசில் கைது செய்யபப்ட்டுள்ளார்.

13 ஆம் வட்டாரத்தின்  rue de Patay வீதியில் BAC காவல்துறையினர் நேற்று முன்தினம் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். மகிழுந்துக்குள் கஞ்சா பொட்டலங்கள் சில இருந்துள்ளன. அதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு, அவரது வீடும் சோதனையிடப்பட்டது. 

வீட்டில் 5 கிலோ கஞ்சாவும், 7.62, 9mm மற்றும் 12mm அளவுகளுடைய துப்பாக்கிச் சன்னங்களும், சில துப்பாக்கிகளும், துண்டு துளைக்காத கவச ஆடைகளும், 200 கிராம் கொக்கைன் போதைப்பொருளும் இருந்துள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் 18 வயதுடைய இளைஞன் எனவும், உடனடியாக அவர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்