மிஸ் பிரான்ஸ் 2025 : நாளை இறுதிச் சுற்று!
13 மார்கழி 2024 வெள்ளி 15:46 | பார்வைகள் : 847
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை டிசம்பர் 14, சனிக்கிழமை இடம்பெற உள்ளது.
30 வரையான அழகிகள் இதில் பங்கேற்க உள்ளனர். சென்றவருடம் இடம்பெற்ற போட்டியில் வயது முதிர்ந்த போட்டியாளராக 28 வயதுடைய அழகி ஒருவர் போட்டியிட்டிருந்தார். இம்முறை 34 வயதுடைய ஒருவர் போட்டியிடுகின்றனர்.
பிரான்சில் அழகிப்போட்டிக்கான விதிமுறைகள் மெல்ல மெல்ல மாற்றத்தினைச் சந்தித்து வருகிறது. வயது வரம்பு மாறுதலுக்கு உள்ளாகிறது. இம்முறை போட்டியின் மாகாண ரீதியான சுறில் 52 வயதுடைய அழகி ஒருவர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று அழகிப்போட்டியில் பங்குபெற குறைந்தது 1.70 மீற்றர் உயரம் இருத்தல் வேண்டும். பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மது உட்கொள்ளாதவராக இருத்தல் வேண்டும் எனவும் மாற்றப்பட்டுள்ளது.