நீதிமன்ற வழக்கில் உள்ள ஒருவரே பிரான்சின் புதிய பிரதமர்!!

13 மார்கழி 2024 வெள்ளி 16:16 | பார்வைகள் : 7538
இன்று பிரான்சின் புதிய பிரதமராக் அறிவிக்கப்பட்டிருக்கும் பிரோன்சுவா பய்ரூ (François Bayrou), ஏழு வருடங்களாகத் தொடரும் ஒரு வழக்கில், தீர்ப்புப் பெறக் காத்திருக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம், சந்தேகத்தின் பலனை அளித்து தற்காலிகமாக இவரை விடுவித்திருந்த நீதிமன்றம், மீண்டும் மீளாய்வு செய்வதாக அறிவித்து, வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
எப்படி மரின் லூப்பன் மீது நிதிமோசடி வழக்கு நடாத்தப்பட்டதோ, அதே போல, இவரது கட்சியான MoDem கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற பிரதிநிதிகளிற்கான நிதியில் பெரும் மோசடி செய்துள்ளார் என, புதிய பிரதமர் பிரோன்சுவா பய்ரூ மீது வழக்குத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்ரோனின் தெரிவு இப்படித்தான் உள்ளது.