அலுவலகத்துக்கு வருகை தந்த புதிய பிரதமர்.. பொறுப்பேற்பு!!
13 மார்கழி 2024 வெள்ளி 16:30 | பார்வைகள் : 1400
நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட François Bayrou, சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.
பதவி விலகியுள்ள Michel Barnier இன் பொறுப்புகளை அவர் பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொறுப்பு ஏற்றுக்கொண்டதன் பின்னர், அடுத்து வரும் நாட்களில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Michel Barnier பதவி விலகி கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆன நிலையில், இன்று காலை புதிய பிரதமராக François Bayrou அறிவிக்கப்பட்டார்.
அதேவேளை, மரீன் லு பென்னின் RN கட்சி உட்பட, பல்வேறு எதிர்க்கட்சிகள் மீண்டும் மற்றுமொரு நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு தயாராவதாக தெரிவித்துள்ளனர்.