Paristamil Navigation Paristamil advert login

Sainte-Geneviève-des-Bois : குழு மோதலில் இருவர் படுகாயம்!

Sainte-Geneviève-des-Bois : குழு மோதலில் இருவர் படுகாயம்!

13 மார்கழி 2024 வெள்ளி 19:00 | பார்வைகள் : 3673


இன்று டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை Sainte-Geneviève-des-Bois (Essonne) நகரில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. rue du 8-Février-1962 வீதியில் குவிந்த பத்துப் பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு துரிதமாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். 

காவல்துறையினர் சம்பவ இடத்தினை அடைந்த போது தாக்குதலாளிகள் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். நெடுஞ்சாலையை அண்மித்து இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, 2008 ஆம் ஆண்டில் பிறந்த தாக்குதலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்