Paristamil Navigation Paristamil advert login

குடியேற்றவாதிகளிற்கு வதிவிட உரிமை - பிரதமர்!

குடியேற்றவாதிகளிற்கு வதிவிட உரிமை - பிரதமர்!

13 மார்கழி 2124 புதன் 17:41 | பார்வைகள் : 119


 

வெளிநாட்டவர்கள் (IMMIGRATION) தொடர்பில் புதிதாகப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரோன்சுவா பய்ரூவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளித்துள்ளார்.

அரசாங்கம் இதற்கான பொருத்தமான தீரவைத் தேடும் என நம்புகின்றேன். அனுமதி மறுக்கப்பட்டவர்களை கட்டயாமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் OQTF (Obligation de quitter le territoire français) இன் நம்பிக்கைத் தன்மை கேள்விக்குரியது. இன்று பிரான்சில் வழங்கப்பட்ட  OQTF களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீங்கள் வீதியில் நடந்து போகும் போது, கட்டட வேலைகள் மற்றும் அதற்கான சாரம் கட்டுவது (கம்பிகளால் அடுக்குகள் அமைப்பது) மற்றும் அனைத்து கட்டட அடிப்படை வேலைகளும் வெளிநாட்டவர்களாலேயே செய்யப்படுவது காணக்கூடியதாக இருக்கும்.

உணவகங்களில் அதிகாலை 5 மணிக்கே வேலைக்குச் செல்வதும் வெளிநாட்டவர்களே!

எனவே,  வேலை செய்பவர்கள் ஓரளவு பிரெஞ்சு மொழியும் பேசத் தெரிந்து, பிரான்சின் தகமைகளை மதிக்கத் தெரிந்த, வதிவிட அனுமதியற்றவர்களிற்கு, அரசாங்கம் வதிவிட உரிமை வழங்கவேண்டும்

என பிரோன்சுவா பய்ரூ தெரிவித்துள்ளார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்