Paristamil Navigation Paristamil advert login

சுவறேறி குதித்த கொள்ளையன்!!

சுவறேறி குதித்த கொள்ளையன்!!

1 கார்த்திகை 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 17685


பரிசில் உள்ள La Santé சிறைச்சாலையில், இதற்கு முன் எப்போதும் கைதி ஒருவர் தப்பித்ததாக வரலாறு இல்லை. வரலாற்றைக் கொண்டுவந்தவன் Jacques Mesrine!!
 
Jacques Mesrine ஒரு உலகமகா கொள்ளையன். இவனின் வாழ்க்கை குறித்து இரண்டு பாகங்களாக திரைப்படங்கள் கூட வெளியாகியிருந்தது. இவன் குறித்த பிரெஞ்சு புதின தொடரும் வெளியிட்டிருந்தோம்.
 
கொள்ளையனை ஒரு வழியாக பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவன் நீண்ட நாட்கள் அங்கு இருக்கவில்லை.
 
1978 ஆம் ஆண்டு மே மாத்தின் 8 ஆம் திகதி விடிந்திருந்த போது, Jacques Mesrine கைகளில் ஒரு நீண்ட இரும்பு கம்பியும், ஒரு கைத்துப்பாக்கியும் இருந்தது. சக கைதியான François Besse உதவியுடன் இந்த இரண்டையும் அவர் சேகரித்திருந்தான்.
 
சிறை அறைக்குள் இருந்து வெளியே வந்திருந்த Jacques Mesrine, சக கைதிகளோடு சகஜமாக சுற்றித்திரிந்தான் .
 
சிறைச்சாலையில் சுற்று மதிலை ஒருதடவை நோட்டம் விட்டான். அது 14 அடி உயரம் கொண்ட இராட்சத உருவில் இருந்தது. 
 
இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியுடன் கையில் வைத்திருந்த நீளமாக இரும்பு கம்பியுடன், அங்கு சிறிய ஏணி ஒன்றில் ஏறி வேலை பாத்துக்கொண்டிருந்த நபர் ஒருவரிடம் சென்றவன், அவரை கண்ணிமைக்கும் நொடியில் தாக்கிவிட்டு, அந்த ஏணியை பறித்துக்கொண்டு வந்தான். 
 
ஏணியை சுவற்றில் சாத்திவிட்டு விறு விறுவென அதில் ஏறினான். ஏணியின் நுனியில் ஏறிய அவன், அங்கிருந்து, கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியை எடுத்து மதிலின் மேலே கொழுவி, அதை பிடித்துக்கொண்டு. சுவற்றில் ஏறினான். பின்னர் அங்கிருந்து வெளிப்பக்கமாக குதித்தான். 
 
அவனுக்கு பின்னால் சுவற்றில் ஏற முற்பட்ட François Besse, சிறைச்சாலை அதிகாரிகளால் சுடப்பட்டான். 
 
வெளியே குதித்த Jacques Mesrine, துப்பாக்கியை வெளியே எடுத்து, எதிரே வந்த மகிழுந்தை நிறுத்தி, சாரதியை வெளியே இழுத்துப்போட்டான். 
 
பின்னர் மகிழுந்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றான். 
 
La Santé சிறைச்சாலையில் இருந்து தப்பித்த முதல் குற்றவாளி என வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டான்!! 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்