அமெரிக்காவில் மகிழுந்துகள் மீது விமானம் மோதி விபத்து
14 மார்கழி 2024 சனி 04:14 | பார்வைகள் : 373
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மகிழுந்துகள் மீது மோதி இரண்டாக முறிந்து விபத்திற்குள்ளானது.
தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைக்கு மேல் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த குறித்த விமானம் திடீரென நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மகிழுந்துகள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது.
இந்த விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.