Paristamil Navigation Paristamil advert login

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

14 மார்கழி 2024 சனி 05:02 | பார்வைகள் : 4481


வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால் டிச.,16 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை துவங்கக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்