புதிய பிரதமர் தொடர்பில் மக்களின் கருத்து என்ன..? - கருத்துக்கணிப்பு!!
14 மார்கழி 2024 சனி 07:00 | பார்வைகள் : 871
நாட்டின் புதிய பிரதமராக François Bayrou பதவியேற்றுள்ளதை அடுத்து, அவர் தொடர்பில் மக்கள் என்ன கருதுகிறார்கள் என கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் 40% சதவீதமானவர்கள் ‘பிரான்சுவா பெய்ருவினை நம்புவதாக தெரிவித்துள்ளனர். “பிரான்சை சிறந்த கொள்கையுடன் வழிநடத்த அவரால் முடியும் என தெரிவித்தனர். அதேவேளை, 60% சதவீதமானவர்கள் பெய்ரு மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை sondage flash எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதேவேளை, முன்னதாக மிஷேல் பார்னியே பிரதமராக கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்டபோது, அவரை 51% சதவீதமான மக்கள் நம்புவாதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.