கடற்பயணம் : 112 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!
14 மார்கழி 2024 சனி 07:51 | பார்வைகள் : 337
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிரித்தானியா நோக்கி பயணித்த 120 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் அதே அளவுடைய அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் CROSS Gris-Nez அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பா-து-கலேயின் Hardelot மற்றும் Ambleteuse ஆகிய கடற்பகுதிகளில் இருந்து அகதிகள் காற்றடிக்கக்கூடிய ஆபத்தான படகுகளில் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர்.
37 பேருடன் ஒரு படகும், 75 பேருடன் ஒரு படகும் பயணித்துள்ளது. அனைவரையும் அதிகாரிகள் மீட்டனர்.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 34,000 பேர் கடல்வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். அதேவேளை இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.