Paristamil Navigation Paristamil advert login

Chanel எனும் மந்திரச் சொல்!!

Chanel எனும் மந்திரச் சொல்!!

17 ஐப்பசி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 17864


இன்றைய பிரெஞ்சு புதினம் ஒரு பெண்மணி பற்றியது. 'பிரெஞ்சு தேசம்' என்றால் உலகம் முழுவதும் "காதலுக்கும்-ஃபாஷனுக்கும்" என அடையாளப்படுத்தியுள்ளது. அப்படி பிரான்சில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அதி நவீன ஆடையகம் தான் Chanel! அதன் உரிமையாளர் தான் 'Coco Chanel' என அழைக்கப்படும் Gabrielle Chanel!!
 
ஆடை வடிவமைப்பில் மிகவும் பிரசித்தி பெற்றவர். குறிப்பாக பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் பல நவீனங்களை புகுத்தி, 'இலகுவான' முறையை கொண்டுவந்தார். 
 
ஜீன்ஸ், அரை கால் சட்டை, கைகள் இல்லான பனியன் என பல ஆடைகளை பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைத்தார். 
 
இந்த புதிய தயாரிப்புக்கள் அமோக விற்பனையைச் சந்திக்க, தயாரிப்புக்களை பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 
 
இரண்டாம் உலகப்போர் சமயம் இவரிடம் பணிபுரிந்த 4,000 பெண்களுக்கு வேலை இல்லாமல் போனதும், அதன் பின்னர் மீண்டும் முயல் பாய்ச்சல் போன்று யுத்தத்துக்குப் பின்னர் மீண்டு வந்ததும் அசாத்திய வாழ்க்கைச் சாதனை...!!
 
அதன் பின்னர், கைப்பைகள், பெண்களுக்கான மேலதிகமான உபகரணங்கள், வாசனைத் திரவியங்கள், உயர்ந்த தர கண்ணாடிகள் என அத்தனையும் இவர் கொண்டுவந்தார். 
 
"இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள்" என்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் ஆடை வடிவமைப்பாளர் இவர் தான். 
 
தன் வாழ்நாளின் இறுதி காலத்தை Ritz உணவகத்தில் கழித்த Chanel, தனது 89 ஆவது வயதில் அதே உணவகத்தின் அறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு சற்று முன்னர் அவ்வருடத்தின் வசந்த காலத்துக்கான ஆடை வடிவமைப்பு பணியில் ஈடுபட்டிருந்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அவர் இறக்கும் போதும், இறந்த பின்னரும்... அவர் பிரான்சின் நிரந்தர 'பில்லியனர்'!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்