ரோபோ சங்கர் ஹீரோ ஆனார்
14 மார்கழி 2024 சனி 14:20 | பார்வைகள் : 4156
மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு ஆடியவர் ரோபோ சங்கர். பின்னர் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் காமெடி நடிகர் ஆனார். பின்னர் அவர் மனைவி, மகளும்கூட நடிகை ஆனார்கள்.
அடுத்தகட்டமாக ரோபோ சங்கர் தற்போது 'அம்பி' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகி உள்ளார். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரிக்கிறார். பாஸர் ஜே. எல்வின் இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.
மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னட இசை அமைப்பாளர் ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan