Paristamil Navigation Paristamil advert login

சூர்யா 45 படத்தில் நடிகை திரிஷா.

சூர்யா 45 படத்தில் நடிகை திரிஷா.

14 மார்கழி 2024 சனி 14:23 | பார்வைகள் : 148


சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான “கங்குவா” வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. “கங்குவா"வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா45’ படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அண்மையில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இப்படத்துக்கான பூஜை நடத்தப்பட்டு, அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப் பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இருந்து விலகினார், அதன் பின் சாய் அபயன்கர் படத்தின் புதிய இசையமைப்பாளராக களமிறங்கினார். இதுகுறித்த அதிகாரபூர்வ போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. படத்தில் சூர்யாவுடன் யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், “சூர்யா 45” படத்தில் களமிறங்குகிறார் பிரபல நடிகை ஒருவர்.

அந்த பிரபல நடிகை வேறு யாரும் இல்லை நடிகை திரிஷா தான். “மௌனம் பேசியதே”, “ஆயுத எழுத்து”, “ஆறு” படத்திற்கு பிறகு சூர்யா-திரிஷா இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கும் படம் இது. 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதன்முதலில் நாயகியாக திரிஷா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

“லியோ”, “கோட்” படத்தில் மட்டும் பாடலுக்கு நடனம், அஜித்துடன் பேக் டு பேக் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி”, கமல்ஹாசனின் “தக்ஸ் லைஃப்” படங்களில் நடித்து வரும் திரிஷா தற்போது சூர்யாவின் 45வது படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்