Paristamil Navigation Paristamil advert login

மகிச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறீர்களா..?

மகிச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறீர்களா..?

14 மார்கழி 2024 சனி 14:28 | பார்வைகள் : 131


மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது உங்கள் இணையர் சிறந்த நண்பராகவும், உங்களின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வது முதல் சவால்களை ஒன்றாகச் சமாளிப்பது வரை, இந்த சிறிய ஆனால் அர்த்தமுள்ள தருணங்கள் ஒன்றிணைந்து ஒரு மகிச்சியான திருமண வாழ்க்கையை உருவாக்குகின்றன. இத்தகைய உறவு வலுவாக இருப்பதோடு உண்மையான மகிழ்ச்சியும் நிறம்பியதாக 

சிறிய தருணங்களை பகிர்ந்து கொள்கிவீர்கள் : அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது தற்செயலாக அரவணைப்பது போன்ற சிறிய விஷயங்கள் தான், பிஸியான நாட்களிலும் உங்களை நெருக்கமாக உணர வைக்கும். காதல் என்பது பிரமாண்டமான விஷயம் அல்ல. அது உங்களைச் சிறப்பாக உணரவைக்கும் சிறிய, அன்றாடச் செயல்களில் தான் உள்ளது. அந்த தருணங்கள், சிறியதாக இருந்தாலும், பிணைப்பை வலுவாக வைத்திருக்கின்றன.

நீங்கள் நீங்களாக இருப்பீர்கள் : நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கவர வேண்டும் என்று நினைக்காமல், உங்கள் பந்தத்தை காலப்போக்கில் வலுவாக்கும் வகையில் நீங்கள் இருவரும் உங்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதில் முகமூடிகள் அல்லது பாசாங்குகள் தேவையில்லை. அதுவே உங்கள் பிணைப்பை உண்மையானதாகவும் உடைக்க முடியாததாகவும் உணர வைக்கிறது.

சந்தோஷத்தை ஒன்றாக பகிர்வீர்கள் : கடினமான சூழ்நிலைகளிலும் கூட, சிரிப்பைப் பகிர்ந்துகொள்வது நீங்கள் இருவரும் இணைந்திருப்பதை உணர உதவுகிறது மற்றும் எல்லாம் சரியாகிவிடும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது. நகைச்சுவை என்பது விஷயங்களை இலகுவாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். நகைச்சுவை அன்றைய நாளின் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. தம்தியர் நெருக்கமாகவும் நேர்மறையாகவும் இருப்பதற்கான எளிய வழி இது.

எல்லாவற்றையும் பற்றி பேசுவீர்கள் (சலிப்பான விஷயங்கள் கூட) : சிறிய விஷயங்களை கூட பேசுவது முக்கியம். ஏனென்றால் அது உங்களை இணைக்கவும், ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஈடுபடவும் செய்கிறது. உங்களின் வேலை நாளாக இருந்தாலும் சரி, மதிய உணவாக இருந்தாலும் சரி, எல்லா விவரங்களையும் பகிர்வது இருவருக்கிடையே பிணைப்பை வலுப்படுத்துகிறது. முக்கியமற்ற பேச்சாகத் தோன்றினாலும், இத்தகைய சிறிய அரட்டைகள் நீங்கள் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் உலகின் ஒன்றிப்போய் இருப்பதைப் போல உணர உதவுகின்றன.

ஒவ்வொருவரின் வளர்ச்சியை ஆதரிப்பீர்கள் : பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் உங்கள் கனவுகளைத் துரத்துவதற்கு நீங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். இது தனிநபர்களாகவும், தம்பதிகளாகவும் ஒருவருக்கொருவர் வளர உதவுகிறது. நீங்கள் ஒருவருக்கொருவர் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடுங்கள். அது பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி.

கருத்து வேறுபாடுகளை நன்றாக கையாள்வீர்கள் : விஷயங்களை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் உடனடியாக பிரச்சினைகளைச் சமாளித்து, ஒருவருக்கொருவர் கருத்தைக் கேட்பீர்கள். கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் தான். ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களை மதிக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. சில சமயங்களில் உடன்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. அப்போதுதான் நீங்கள் ஒருவரையொருவர் பற்றி மேலும் அறிந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறீர்கள் : ஒன்றாகச் சமைப்பதாக இருந்தாலும் சரி, நிகழ்ச்சியைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் நேரம் தான் முக்கியமே தவிர, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஒரு காபி கடைக்கு செல்வது, ஒன்றாக நடைபயிற்சி செல்வது அல்லது அமைதியாக இருப்பது கூட அந்த தருணங்கள் உங்களுடன் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும். இத்தகைய சிறிய விஷயங்கள் தான் உங்கள் நாளை முழுமையடையச் செய்யும்.

ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள் : பெரிய சவால்கள் அல்லது சிறிய எரிச்சல்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஒருவரையொருவர் நம்பி எதையும் சமாளிக்க முடியும் என்பது உங்கள் இருவருக்கும் தெரியும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாளராக இருக்கிறீர்கள். இது உங்கள் கடினமான நாட்களைக் கூட சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் ஒருவரையொருவர் தேர்வு செய்வீர்கள் : நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் முன்னுரிமைப் படுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உங்கள் இணைப்பு வலுவாக இருப்பதை உறுதிசெய்கிறீர்கள். இந்த அர்ப்பணிப்பு ஒரு நல்ல உறவை அசாதாரணமானதாகவும் நீடித்ததாகவும் மாற்றுகிறது. காதல் என்பது நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் ஒன்று என்பதை நினைவூட்டுகிறது. இறுதியில், மகிழ்ச்சியான திருமணம் என்பது நம்பிக்கை, ஒருவரையொருவர் ஆதரிப்பது மற்றும் ஒன்றாக இணைந்து வளர முயற்சி செய்வதே ஆகும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்