14 மார்கழி 2024 சனி 15:22 | பார்வைகள் : 186
யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் நோய், “லெப்டோஸ்பிரோசிஸ்” என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கிட்டதட்ட 50 நோயாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தார்.