Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு இராணுவத்துக்கான இசைக்குழு!!

பிரெஞ்சு இராணுவத்துக்கான இசைக்குழு!!

16 ஐப்பசி 2018 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 18243


வீதிக்கு வீதி இசைக்குழுக்கள் நிறைந்து கிடக்கும் பிரான்சில், பிரெஞ்சு இராணுவத்தினருக்கு என் ஒரு இசைக்குழு இருப்பது உங்களுக்குத் தெரியுமா??
 
தேசிய கீதம், எழுச்சி பாடல்கள், அஞ்சலி பாடல்கள் என 'நாட்டுக்குத் தேவையான' பாடல்கள் மாத்திரமே இவர்கள் இசையமைப்பார்கள்.
 
Garde républicaine க்கு சொந்தமான இந்த இசைக்குழுவே, ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வின் போது குதிரையில் இருந்து Band வாசிப்பார்களே... அவர்கள் தான் இவர்கள்...!! 
 
தேசிய நாளின் போதோ... அல்லது அஞ்சலி நிகழ்வு, அரச விழாக்கள் என சோம்ப்ஸ்-எலிசே உள்ளிட்ட பல பகுதிகள் அடிக்கடி இவர்கள் இசைக்கிறார்கள். 
 
இவர்கள் எங்கே இசை பயில்கிறார்கள் என்றால்... அதற்கு தனியே ஒரு கதை உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால் பிரெஞ்சு 'நீதி அமைச்சு'க்கென தனியே ஒரு இசை கல்லூரி உண்டு. Conservatory of Military Music of the Army என அழைக்கப்படும் இந்த கல்லூரி Versailles இல் உள்ளது. அங்குதான் இந்த இசைக்குழு உருவாகின்றது. 
 
இதில் பல பிரிவுகள் உள்ளது. குறிப்பாக, ஜோந்தாமினருக்கு ஒரு இசைக்குழு, காவல்துறையினருக்கு ஒரு இசைக்குழு, CRS படையினருக்கு என கூட தனியே இசைகுழு உண்டு. 
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள்... பிரெஞ்சு தீயணைப்பு படையினருக்கு எனவும் ஒரு இசைக்குழு தனியே உண்டு. Musique de la brigade de sapeurs-pompiers de Paris என மிக நீண்ட பெயரைக்கொண்ட இந்த இசைக்குழு, தீயணைப்பு படை வீரன் ஒருவன் உயிரிழந்தால் அஞ்சலி செலுத்தப்படும் போது இவர்கள் இசை வழங்குவார்கள்.  
 
இனிமேல் பிரான்சில் இசை எங்கிருந்து வருகிறது என கேட்காதீர்கள்... அது எங்கிருந்து வேண்டுமானாலும் வரும்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்