Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு கடற்படைக்கு என ஒரு அருங்காட்சியகம்! - அவசியம் பாருங்கள்!!

பிரெஞ்சு கடற்படைக்கு என ஒரு அருங்காட்சியகம்! - அவசியம் பாருங்கள்!!

12 ஐப்பசி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18110


இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பரிசில் உள்ள கடற்படை அருங்காட்சியகம் குறித்து சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 
 
அருங்காட்சியகம் என்றால், அதை அத்தனை சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஒரு அமெரிக்கத் திரைப்படத்தில் வருவது போல்... அத்தனை பிரம்மாண்டம். அதற்கு காரணம்... பிரெஞ்சு கடற்கடையிடம் இருந்த கப்பல்களின் பிரம்மாண்டம். 
 
சிறிய ரக கப்பல்களில் இருந்து மிக இராட்ச அளவு கொண்ட போர்க்கப்பல்கள் வரை இங்கு 'மினியேச்சர்'களாக பார்வைக்கு வைத்துள்ளனர். 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கப்பல்களை நீங்கள் பார்க்க ஆரம்பித்தால், உங்கள் கண்கள் அகல விரிய ஆரம்பித்துவிடும்.
 
 
 
15 ஆம் லூயி மன்னன் இந்த அருங்காட்சியகத்தை ஆரம்பித்து வைத்தான். வெவ்வேறு இடங்களுக்கு இந்த அருங்காட்கியகம் மாற்றப்பட்டு, லூவர் அருங்காட்கியகத்தில் கூட சில நாட்கள் இருந்து, பின்னர் நெப்போலியன் இதை மேலும் மெருகூட்டவேண்டும் என எண்ணி, தனியாக "Musée national de la Marine" என ஆரம்பித்ததோடு, இந்த அருங்காட்சியகம் பிறந்தது. 
 
போர்க்கப்பல்களின் கட்டுமானம் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். கப்பலில் நான்கு பக்கங்களிலும் பீரங்கி குழாய்கள் வெளியே நீட்டி, எதிரி கப்பலை சிதைத்து தள்ளும் வீரியம் கொண்ட இராட்சத கப்பல்கள் எல்லாம் இங்கு பார்வைக்கு உள்ளன. 
 
விமானங்கள் ஓடுதளம் கொண்ட கப்பல்கள், சரக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்லும் 'கூட்ஸ்' கப்பல்கள்... (பெட்டிகள் என்றால்.. 1500 க்கும் மேற்பட்ட மிகப்பெரும் கொள்கலன்களை ஏற்றக்கூடியது) என பல கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 
திறக்கப்பட்ட ஆண்டு, கப்பல் எண்ணிக்கை, திறந்து வைத்தவர் என உங்களை 'போர்' அடிக்காமல்...ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளோம்... மிகுதியை நேரில் சென்று பாருங்கள்....!!
 
முகவரி : 17 Place du Trocadéro et du 11 Novembre, 75116 
 
செவ்வாய்க்கிழமை தவிர்த்த மீதி அனைத்து நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்