Paristamil Navigation Paristamil advert login

Loto : €13 மில்லியன் யூரோக்கள் வெற்றி!!

Loto : €13 மில்லியன் யூரோக்கள் வெற்றி!!

15 மார்கழி 2024 ஞாயிறு 09:52 | பார்வைகள் : 6055


நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Savoie மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் €13 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டியுள்ளார்.

குறித்த மாவட்டத்தில்  வெற்றிபெறப்பட்ட அதிகூடிய தொகை இது ஆகும். முன்னதாக 2011 ஆம் ஆண்டு ஏப்ரலில் நபர் ஒருவர் 12 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார். அதுவே அங்கு பதிவான அதிகூடிய வெற்றித்தொகையாக இருந்தது. 

FDJ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் Super loto அதிஷ்ட்டலாபச் சீட்டில் இவ்வருடத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்