அவுட் ஆனதால் Batஐ தூக்கிய வீசிய ஸ்டோய்னிஸ்
15 மார்கழி 2024 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 122
பிக்பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணித்தலைவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆட்டமிழந்த விரக்தியில் துடுப்பை தூக்கி மேலே வீசினார்.
பெர்த்தில் ஆடவர் பிக்பாஷ் லீக் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் துடுப்பாடியபோது 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அணித்தலைவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
33 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
ஆண்ட்ரூ டை நேராக ஸ்டம்பை நோக்கி எறிந்து அவரை ஆட்டமிழக்க செய்தார். இதனால் விரக்தியடைந்த ஸ்டோய்னிஸ் தனது துடுப்பை மேல் நோக்கி வீசினார்.