ஈஃபிள் கோபுரத்தில் ஜேம்ஸ் பாண்ட்!!
11 ஐப்பசி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18180
அமெரிக்க திரைப்பட இயக்குனர்களுக்கு ஈஃபிள் கோபுரம் மீது ஒரு கண். எப்போதும். காதல் படம் எடுத்தால் ஒரு 'ரொமாண்டிக்' காட்சியாவது ஈஃபிளில் வைத்துவிடவேண்டும்... 'ஆக்ஷன்' படம் என்றால் ஈஃபிள் கோபுரத்தின் கம்பிகளுக்குள் தொங்கவேண்டும்.
முன்னர் ஒருதடவை "ஈஃபிள் கோபுரத்தில் ஜாக்கிசான்" என பிரெஞ்சு புதினம் படித்திருப்பீர்கள். இம்முறை பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்!!
ரோஜர் மூர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த இறுதித்திரைப்படம் "A View to a Kill" ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் இது 14 ஆவது திரைப்படம்.
1985 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியை ஈஃபிள் கோபுரத்தில் எடுத்திருப்பார்கள்.
"May Day" என பெயர் கொண்ட அந்த மர்மக்கொலையாளியை பாண்ட், பின் தொடர்ந்து வருவார். அந்த துரத்தல் ஈஃபிள் கோபுரத்தில் வந்து முடியும்.
கொலையாளியை துரத்திக்கொண்டு ஜேம்ஸ்பாண்டும் ஈஃபிளில் ஏறுவார். அங்கு பல குளறுபடிகளுக்கு பின்னர் May Day, பரஷூட் ஒன்றை பயன்படுத்தி அங்கிருந்து தப்பித்துச் செல்வார். கொலையாளியை தப்பிக்க விட்டு, வேடிக்கை பார்ப்பார் ஜேம்ஸ்... பின்னர் க்ளைமேக்ஸில் கண்டுபிடித்து ஆக்ஷனில் பட்டையைக் கிளம்புவார்... அதை விடுங்கள்..!
May day கதாப்பாத்திரத்தில் நடித்தது, ஜமைக்கா அழகி, பிரபல பாடகி, பாடலசிரியர்... நடிகை Grace Jones!!
$30 மில்லியனில் தயாரித்து, $152 மில்லியன்களை வாரி கொட்டியது இத்திரைப்படம்!!