இனப்பெருக்கம், உணவிற்காக 8,106 மைல் நீந்திச் சென்ற திமிங்கலம்! வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்

15 மார்கழி 2024 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 2779
பெருங்கடல்களை கடந்து 8,106 மைல் தொலைவுக்கு திமிங்கலம் ஒன்று பயணம் செய்து இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூனல் முதுகு திமிங்கலம்(Humpback Whale) ஒன்று தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக 8,106 மைல் (13,046 கிலோமீட்டர்) தூரம் நீந்திச் சென்று முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்த முன்னோடியில்லாத பயணம் குறித்து ராயல் சொசைட்டி ஓபன் சயன்ஸ்(Royal Society Open Science) இதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வயது வந்த ஆண் கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களுக்கு இடையே கடந்து சென்றதாக கவனிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2013 ஆம் ஆண்டில் கொலம்பியா அருகே முதலில் கண்டறியப்பட்ட இந்த திமிங்கலம், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே பகுதியில் மீண்டும் காணப்பட்டது.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டில், ஹாப்பி வேல் தளத்தை(Happy Whale platform) பயன்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்த திமிங்கலத்தை ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலுள்ள ஜாம்பியார் அருகே கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
திமிங்கலத்தின் இந்த நீண்ட தூர பயணமானது, கூனல் முதுகு திமிங்கலங்களின் சாதாரண ஓரிரு திசை இடம்பெயர்வு தூரத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக தாண்டியுள்ளது.
கொலம்பியாவில் துணையைப் பெறுவதற்கான போட்டி மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற காரணிகள் திமிங்கலத்தின் இந்த அசாதாரண பயணத்திற்குத் தூண்டுதலாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சுமார் 109,000 திமிங்கலங்கள் குறித்த தரவுகளை தற்போது கொண்டுள்ள Happy Whale தளம், குறிப்பிட்ட திமிங்கலங்களின் விவரங்களை கண்காணிக்க உதவுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1