Sartrouville : அறையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

15 மார்கழி 2024 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 7216
Sartrouville (Yvelines) நகரில் உள்ள தங்குமிடம் ஒன்றின் அறையில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14, சனிக்கிழமை நண்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அங்குள்ள தங்குமிடம் ஒன்றுக்கு விரைந்து சென்றுள்ளனர். விடுதியின் அறை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலம் இரத்த வெள்ளத்தில் உறைந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் நண்பர் இச்சடலத்தை முதலில் பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.