பரிஸ் : மனைவியை துப்பாக்கி மூலம் மிரட்டிய ஒருவர் கைது!
15 மார்கழி 2024 ஞாயிறு 18:18 | பார்வைகள் : 401
கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் மனைவியை அச்சுறுத்திய ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று முன்தினம் டிசம்பர் 13 ஆம்திகதி இட்மபெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதத்தின் முடிவில், கணவன் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து மனைவியை மிரட்டியுள்ளார்.
அதன்போது அவரது மனைவி சம்பவ இடத்தில் இருந்து ஒருவழியாக தப்பித்துக்கொண்டு வெளியே சென்று காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அவரை துரத்திக்கொண்டு வந்த அவரது கணவரை காவல்துறையினர் இறுதி நிமிடத்தில் கைது செய்து, அப்பெண்ணைக் காப்பாற்றினார்கள்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.