Paristamil Navigation Paristamil advert login

 அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் இடையே கலந்துரையாடல்

 அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் இடையே கலந்துரையாடல்

16 மார்கழி 2024 திங்கள் 05:49 | பார்வைகள் : 6229


அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காஸாவில் ஹமாஸ் கைதிகளை விடுவிப்பது மற்றும் சிரியாவின் சமீபத்திய நிலைமை பற்றியதாகும்.

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சிரியாவுடன் மோதல்களை உருவாக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது எல்லைப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சுமார் 45,000 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்