பெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI...!
16 மார்கழி 2024 திங்கள் 09:05 | பார்வைகள் : 137
டெக்சாஸை சேர்ந்த தாய் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சம்பவம், AI-யின் ஆபத்துகள் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது.
டெக்சாஸை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் அளவுக்கு மீறி செல்போன் பயன்படுத்தியதால், அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு அவரிடம் செல்போன் கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த சிறுவன் Character.AI என்ற AI சாட்பாட்டின் உதவியை நாடியுள்ளார்.
சிறுவனின் செல்போன் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த AI சாட்பாட் அதிர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது.
செல்போன் பயன்பாட்டுக்கு பெற்றோர் தடை விதிப்பதாகவும் அதற்கான தீர்வு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த AI சாட்பாட், பெற்றோரை கொலை செய்து விடுவதே தீர்வு என்று அறிவுறுத்தியுள்ளது.
சாட்பாட்டின் இந்த பதிலை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாட்பாட் உடனான சிறுவனின் உரையாடல் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமர்பிக்கப்பட்டது.
இச்சம்பவம், AI தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.