Pierrefitte-sur-Seine : ஐந்து மகிழுந்துகள் திருட்டு.. ஆறு பேர் கைது!
16 மார்கழி 2024 திங்கள் 11:44 | பார்வைகள் : 620
மகிழுந்து திருட்டு தொடர்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு இந்த கடத்தல் கும்பல் Pierrefitte-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் திருடப்பட்ட மகிழுந்துகள் மொத்தமாக ஐந்து இருந்ததாகவும், நவீன முறையில் அவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு அவை திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய நாள் இரவு 10.30 மணி அளவில் அப்பகுதியில் பயணித்த Hyundai Tucson SUV மகிழுந்து ஒன்று பயணிப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். குறித்த மகிழுந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, குறித்த மகிழுந்தைப் பின் தொடர்ந்து, குறித்த கும்பலைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.