Paristamil Navigation Paristamil advert login

Rouen நகரம் - சிறு அறிமுகம்!!

Rouen நகரம் - சிறு அறிமுகம்!!

8 ஐப்பசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 17714


பிரான்சில் உள்ள பல புகழ்பெற்ற நகரங்களில் இதுவும் ஒன்று. நிறவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நகரம் பற்றியும் நகர மக்கள் பற்றியும் சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 
 
Normandie மாகாணத்தின் தலைநகர் தான் Rouen. இங்கு வசிப்பவர்களில் ஒரு பகுதியினரை Anglo-Normans என அழைக்கப்படுகின்றனர். காரணம் 11 - 15 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை பிரான்சும் பிரித்தானியாவும் சேர்ந்தே ஆண்டுகொண்டிருந்தன. 
 
பரிசை போலவே சென்நதி Rouen நகரினை அமைதியாக கடக்கிறது. இந்நகர மக்களுக்கான பெரும் கொடை இது. 
 
இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பாதிப்புக்குள்ளானது இந்த நகரம். கிட்டத்தட்ட அனைத்தையுமே இழந்து மிக மோசமான பேரழிவைச் சந்தித்தது. இந்த பேரழிவை புகைப்படங்களாகவும், இன்னபிற வகையிலும் ஆவணங்களாக்கி வைத்துள்ளனர். இங்குள்ள musée maritime fluvial et portuaire de Rouen அருங்காட்சியகத்துக்குச் சென்றால் அதை பார்வையிடலாம். 
 
"Astronomical clock" என அழைக்கப்படும் 24 மணிநேரம், சூரியன், சந்திரம், வகிமண்டல நட்சத்திரங்களை கணிக்ககூடிய இராட்சத கடிகாரம் அமைக்கப்பட்டுள்ள இடம் ஒன்று இங்கு உள்ளது. Rue du Gros-Horloge வீதிக்குச் சென்றால் அங்கு Gothic கலைக்கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இது உள்ளது. தவறவிடாமல் பார்க்கவும். 
 
 
Pont Gustave-Flaubert என அழைக்கப்படும் ஒரு மேம்பாலம் சமீபத்திய ஆச்சரியம். சென் நதியின் மேல் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதே நகரில் பிறந்த பிரபல நாவலாசிரியரான Gustave Flaubert இன் பெயரே இந்த பாலத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. 
 
1880 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒரு தேவாலயம் இங்கு உள்ளது. திகில் படங்களில் வருவது போல் பழமை என்றால் இது தான் பழமை... 1880 ஆம் ஆண்டு திறக்கப்பட்டாலும், இதை கட்ட ஆரம்பித்தது 1030 ஆம் ஆண்டு. சுமார் ஒரு பத்து தலைமுறையாக 800 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக்கொண்டிருந்துள்ளார்கள். இது குறித்த மேலும் பல தகவல்கள் பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
 
Rouen நகரில் பிறந்து, வளர்ந்து பிரபலமான பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் என பெரும் பட்டியலே உள்ளது. எழுத்தாளர் எத்துவா பிலிப் கூட இங்கு தான் பிறந்தார். ஆனால் பின்நாட்களில் அவர் நாட்டின் பிரதமர் ஆகிவிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்