Paristamil Navigation Paristamil advert login

இருநூறு வருடங்களை தொடும் இலக்கியம் : Revue des deux Mondes !!

இருநூறு வருடங்களை தொடும் இலக்கியம் : Revue des deux Mondes !!

5 ஐப்பசி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19371


'Revue des deux Mondes' என்பது ஒரு மாதாந்த சஞ்சிகையின் பெயர். என்றால் 'இரு உலகங்களின் விமர்சனம்' என அர்த்தம் தருகிறது. 
 
இன்றும் மாதந்தோறும் வெளியாகிவரும் இந்த சஞ்சிகை 1829 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்புவிர்களா??!!
 
Prosper Mauroy மற்றும் Pierre de Ségur-Dupeyron ஆகிய இருவர் சேர்ந்து இந்த சஞ்சிகையை ஆரம்பித்தார்கள். முதல் இதழ் ஓகஸ்ட் 1 ஆம் திகதி 1829 ஆம் ஆண்டு வெளியானது. 
 
பின்னர் மாதம் தோறும் இதழ்கள் வெளியாகிக்கொண்டிருந்த போதும், அதன் நிறுவனர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். பலரின் கைகளுக்கு இந்த சஞ்சிகையின் உரிமம் மாறிக்கொண்டே இருந்தது. 
 
அதேவேளை, சஞ்சிகையின் தரமும், அச்சுத்தரமும் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டே வந்தது. 
 
 
பல தொடர்களும், இலக்கிய கட்டுரைகளும் கவிதைகளும் இந்த சஞ்சிகையை நிரப்பிக்கொண்டிருந்தன. வரலாற்றில் இடம்பிடித்த பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் இந்த சஞ்சிகையில் தங்கள் எழுத்துக்களை அச்சில் ஏற்றியுள்ளனர். 
 
தற்போது தொடர்ந்தும் வெளியாகும் இந்த சஞ்சிகையில் அரசியல் கட்டுரைகளையும் பிரசுரிக்கின்றனர். 
 
 Elle சஞ்சிகையின் நிர்வாகி ட்ஜ்ட்ஜ்ட்ஜ் தற்போது இந்த  சஞ்சிகையின் 'எடிட்டர்' ஆக உள்ளார். பத்து யூரோக்கள் விலையை சஞ்சிகை தொட்டிருந்தாலும், அதிகளவில் விற்பனையாகிக்கொண்டு தான் உள்ளது. 
 
இலக்கியம் பேசும் சஞ்சிகைகள் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளை நெருங்கி விற்பனையாகி வருவது ஆரோக்கியமான ஒன்றுதானே??!
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்