Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் தீவிர ஆலோசனை! - அமைச்சரவை எப்போது அறிவிக்கப்படும்...?

பிரதமர் தீவிர ஆலோசனை! - அமைச்சரவை எப்போது அறிவிக்கப்படும்...?

17 மார்கழி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 3767


அரசாங்கத்தை தற்போது தனி ஒரு ஆளாக பிரதமர் François Bayrou கொண்டுநடாத்துகிறார். அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் புதிய அமைச்சரவையை எப்போது அறிவிப்பார் எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கிறிஸ்மசுக்கு முன்பாகவே அமைச்சர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என அறிய முடிகிறது. இது தொடர்பில் உத்தியோகபூர்வமான செய்திகள் அறிவிக்கப்படவில்லை என்றபோதும், இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னரே விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சித்தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ‘பொது கொள்கை விளக்க உரையினை பிரதமர் நிகழ்த்துவார்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு செல்கிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்