Paristamil Navigation Paristamil advert login

Sully Prudhomme : பிரெஞ்சு இலக்கியத்தின் முன்னோடி!!

Sully Prudhomme : பிரெஞ்சு இலக்கியத்தின் முன்னோடி!!

4 ஐப்பசி 2018 வியாழன் 11:30 | பார்வைகள் : 17727


பிற மொழிகளைப் போல் அல்லாது, பிரெஞ்சு மொழி மிகுந்த ஆளுமையைக் கொண்டது. அதன் வீரியத்தை பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவந்து வரலாற்றில் இடம்பிடித்தனர். அவர்களில் ஒருவர் தான் Sully Prudhomme!!
 
இவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். மார்ச் 16, 1839 ஆம் ஆண்டு பரிசில் பிறந்த இவர், இவர் படித்தது பொறியியல் படிப்புத்தான். ஆனால் ஆர்வத்தின் மிகுதியால் எழுத்துலகத்துக்குள் வந்து சேர்ந்தார். 
 
1865 ஆம் ஆண்டு தனது முதலாவது படைப்பான 'Stances et Poèmes' புத்தகத்தினை வெளியிட்டார். அவரின் உலகப்புகழ் பெற்ற 'Le vase brisé' கவிதையினையும் இந்த புத்தகத்தின் மூலம் அச்சிலேற்றியிருந்தார். 
 
 
தொடர்ச்சியாக எழுத்துலகத்தில் பயணித்தார். La Justice (1878 ஆம் ஆண்டு)  Le Bonheur (1888 ஆம் ஆண்டு) என கவிதை புத்தகங்கள் வெளியாகின. 
 
இதற்கு முன்னர் வெளியான கடும் இலக்கியத்தன்மை இல்லாது, நவீன மொழியில் தரம் குறையாது கவிதைகளை எழுதவும், வெகுவாக இரசிக்கப்பட்டு புகழில் உச்சிக்குச் சென்றார். 
 
புது மில்லேனியம் பிறந்து, பல ஆச்சரியங்களையும் இவருக்கு கொண்டு சேர்ந்தது. 1901 ஆம் ஆண்டு இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. 
 
பிரான்சில் முதல் நோபல் பரிசு பெற்ற முதல் நபர் இவர் என வரலாறு தன் பக்கங்களில் கிறுக்கிக்கொண்டது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்