அமெரிக்கா பாடசாலையின் மீது துப்பாக்கிச்சூடு...! 3 மாணவர்கள் பலி
17 மார்கழி 2024 செவ்வாய் 08:49 | பார்வைகள் : 262
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் 16.12.2024 விஸ்கான்சினின் அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் வீதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.