Gustave Eiffel கட்டிய மேம்பாலம்!!
3 ஐப்பசி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 19322
Gustave Eiffel வெறுமனே ஈஃபிள் கோபுரம் மட்டும் தான் கட்டினார் என எண்ணிக்கொண்டுள்ளோம்... ஆனால் அவர் ஈஃபிள் கோபுரம் போன்றே பல வியத்தகு அம்சங்களை உலகுக்கு விட்டுச் சென்றுள்ளார்.
ஈஃபிள் கோபுரம் போன்றே, பார்த்ததும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மேம்பாலத்தை Gustave Eiffel கட்டினார். அதன் பெயர் Garabit viaduct!!
தொடரூந்து ஒன்று ஒரு ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டும். அதற்காக கட்டப்பட்ட இரும்புப்பாலம் தான் இது. Cantal மாவட்டத்தை ஊடறுக்கும் Truyère நதிக்கு மேலாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
1882 ஆண்டு கட்டிடம் கட்ட ஆரம்பித்து, இரண்டே வருடங்களில் 1884 ஆம் ஆண்டு நிறைவடைந்தது இந்த பணி.
1,854 அடி நீளம் கொண்டது இந்த பாலம். அதாவது இரண்டு ஈஃபிள் கோபுரங்களை பக்கவாட்டாக படுக்க வைத்தால் வரும் நீளம்.
இந்த பாலத்தை கட்டுவதற்கு 3,100,000 பிராங்குகள் செல்வானதாம்.
இது குறித்த இன்னும் பல சுவையான தகவல்கள் உள்ளது. அவற்றை பிறிதொரு நாள் பார்க்கலாம்.!!