Charles Aznavour : இசை உலகின் மன்னன் - வாழ்க்கை வரலாறு!!
2 ஐப்பசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18297
Charles Aznavour இசை அரசன்... இசை உலகில் அவர் எப்போதும் மன்னன் தான். கலைஞர்களுக்குள் இருக்கும் கோபம் பொல்லாதது. அது எப்போதும் கலைஞர்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். Charles Aznavour இன் கோபமும் அப்படித்தான்...
மே 22, 1924 ஆம் ஆண்டு பரிசில் பிறந்தார். இவரின் தந்தை மற்றும் தாயார் ஆர்மேனிய நாட்டினைச் சேர்ந்தவர்கள்.
1946 ஆம் ஆண்டு, தனது 22 ஆவது வயதில் Edith Piaf இனை சந்திக்கின்றார். பின்னர் அவருடன் அடுத்த 8 வருடங்கள் பயணிக்கின்றார். Edith Piaf - இவரின் ஆஸ்தான பியானோ கலைஞர்.
1953 ஆம் ஆண்டு "Viens au Creux de mon épaule" எனும் பாடல், இவரது முதல் வெற்றிப்பாடலாக அமைகிறது. அங்கே அவரது இசை பயணம் வெற்றிப்பயணமாக அமைகிறது.
1960 ஆம் ஆண்டு, முதன் முதலாக திரைப்படம் ஒன்றில் நடித்து, 'நடிகர்' எனும் பட்டியலில் ஒரு இடத்தினை தக்கவைத்துக்கொள்கிறார். இயக்குனர் Francois Truffaut இயக்கிய அந்த திரைப்படத்தின் பெயர் "Shoot the Piano Player".
1973 ஆம் ஆண்டு முதன் முதலாக 'ஓரினச்சேர்க்கையாளர்கள்' குறித்து ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டார். 'She' எனும் ஆல்பத்தில் அமைந்த அந்த பாடல், "Comme ils Disent'. ஆச்சரியமாக இந்த பாடல் உலகம் முழுவதும் 'மெஹா ஹிட்' ஆனது.
1997 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு விருதில் 'சிறந்த ஆண் பாடகர்' விருதை பெற்றுக்கொள்கிறார்.
2004 ஆம் ஆண்டு தனது 80 ஆவது பிறந்தநாளில், பரிஸ் 'Palais des Congres' இல் ஒரு இசை நிகழ்ச்சியினை மேற்கொள்ளுகிறார்.
2015 ஆம் ஆண்டு அவரின் 51 ஆவது ஆல்பமும், அவரது இறுதி ஆல்பமுமான 'Encores' ஆல்பத்தினை வெளியிடுகிறார்.
வாழ்நாளில் மொத்தமாக 180 மில்லியன் 'ஒலிப்பதிவுகள்' விற்பனையாகி சாதனை படைத்திருந்தது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு தனது 94 ஆவது வயதில் பரிசில் உயிரிழந்தார்.