பேருந்து சாரதி தற்கொலை... - Valérie Pécresse மீது விமர்சனம்!
18 மார்கழி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 1373
Val-d'Oise மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து சாரதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மரணம் தொடர்பில் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரும், பொது போக்குவரத்துசபையின் தலைவருமான Valérie Pécresse மீது மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Val-d'Oise மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 14 ஆம் திகதி Ludovic L எனும் பேருந்து சாரதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
‘
FSO நிறுவனத்தில் பணிபுரியும் குறித்த சாரதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரது தற்கொலைக்கு இல் து பிரான்ஸ் பொதுபோக்குவரத்து சபையின் (Ile-de-France Mobilités) மெத்தனப்போக்கே காரணம் என La France Insoumise கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர் பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.