Paristamil Navigation Paristamil advert login

இலண்டன் vs பரிஸ்!!

இலண்டன் vs பரிஸ்!!

1 ஐப்பசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 17644


ஐரோப்பாவின் இரண்டு அசாத்தியமான நகரங்கள். பிரித்தானியாவின் இலண்டன் மற்றும் நமது பரிஸ் நகரம்..!! 
 
ஐரோப்பாவில் எப்போதும் முன்னணியில் இருப்பது பரிஸ் தான். பரிஸ் என்றதுமே காதலும், நவநாகரீகமும் ஞாபகம் வருகின்றதா..? அது இன்று வந்ததல்ல...
 
பரிஸ் மாவட்டம் 104 சதுர கிலோமீட்டர்களால் ஆனது. தற்போது 22 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பரிசில் 1300 ஆம் ஆண்டிலேயே இரண்டு இலட்சம் மக்கள் வசித்ததாக தரவேடு சொல்கிறது. 
 
அதே 1300 ஆம் ஆண்டில் இலண்டனில் 80,000 மக்கள் மாத்திரமே வசித்தனர். 
 
17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவின் மிக முக்கியமான நகரமாக பரிஸ் அடையாளம் பெற தொடங்கியிருந்தது. 
 
வர்த்தகம், தொழில்துறை, ஃபேஷன், விஞ்ஞானம், இசை, ஓவியங்கள் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரும் வளர்ச்சியை கொண்டிருந்தது பரிஸ். 
 
குறிப்பாக அழகு சாதனப்பொருட்கள், ஆடம்பர உடைகள், கைப்பைகள் என சில 'அதி உயர்' விலைகொண்ட பொருட்கள் அனைத்தும் பரிஸ் எனும் நாமத்தையே கொண்டிருக்கும். 
 
பரிசுக்குள் ஒரு மாதத்துக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்த €81 யூரோக்கள் போதுமானது. ஆனால் இலண்டனில் சராசரியாக $166 தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
இன்றைய திகதியில் பரிசை விட இலண்டனிலேயே மக்கள் தொகை அதிகம் இருந்தாலும், வேலையற்றோரின் எண்ணிக்கையும் அங்கு அதிகமாகவே உள்ளது. 
 
இரண்டு நகரவாசிகளுக்கும் இருக்கும் பொதுவாக ஒரு குறை என்னவென்றால்... 'அட... நம்மூர்ல கடற்கரை இல்லையே!' என்பது தான். 
 
மேலதிகமாக ஒரு தகவல் சொல்கிறோம். 2018 ஆம் ஆண்டில் 'உலகின் செலவீனம் அதிகம் கொண்ட நகரம்!' எனும் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூரும், இரண்டாம் இடத்தில் பரிசும் உள்ளது. அதேபோன்று 'பார்க்கிங்' எனும் ஒற்றை வஸ்துவுக்கு நாம் செலவு செய்வதும் அதிகம் என்கிறார்கள் ஆர்வலர்கள். அடப்பாவமே!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்