Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மூன்று வழிமுறைகளில் வாகன இறக்குமதிக்கு அனுமதி

இலங்கையில் மூன்று வழிமுறைகளில் வாகன இறக்குமதிக்கு அனுமதி

18 மார்கழி 2024 புதன் 10:41 | பார்வைகள் : 270


வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால சூழல் இனியொருபோதும் தோற்றம் பெறாது என்றும் 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்