பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
25 புரட்டாசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 17669
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது. அத்தனை எளிதில் கிடைக்கவில்லை வாக்குரிமை.
ஆண்களுக்கு வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டு நூறு வருடங்கள் ஆகியிருந்தன. சட்டசபையில், அரசியல்களில் எல்லாம் ஆண்கள் ஆண்கள் ஆண்கள் மாத்திரமே நிறைந்திருந்தனர்.
இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த கையோடு, பெண்கள் வாக்குரிமை உரிமை கோரி வீதியில் இறங்கிவிட்டனர்.
ஆர்ப்பாட்டங்கள், முன்னெடுப்புக்கள் என எங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என தீர்க்கமாக நின்றனர். அப்போது பிரதமராக இருந்த சாள்-து-கோல் இந்த கோரிக்கையை ஏற்று சட்டம் இயற்றுகிறார்.
ஏப்ரல் 21, 1944 ஆம் அண்டு சட்டம் இயற்றப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது.
ஒரு வருடத்துக்குப் பின்னர், 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி இடம்பெற்ற நகராட்சித் தேர்தலில் பெண்கள் முதன் முதலாக வாக்கு செலுத்தினார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த தேர்தலில் 12 மில்லியன் மக்கள் வாக்குச் செலுத்தினார்கள். அதில் 6 மில்லியன் பேர் பெண்கள்!!
சமத்துவம் பிறந்தது!!