Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம்!! ரஷ்யா!

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம்!! ரஷ்யா!

18 மார்கழி 2024 புதன் 12:01 | பார்வைகள் : 859


புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும்' என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருந்து நிறுவனங்கள், 'மெலனோமா' எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன. அந்த வகையில், புற்று நோய் தடுப்பூசிகள் உருவாக்கும் பணிகளில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக, களத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர்.

சமீபத்தில், 'ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்,'' எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று (டிச.,18) புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முக்கியமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துக்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கூறியதாவது: புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்